Tuesday, June 24, 2014

நாதி அற்றுப் போய்க் கிடக்கும் அம்பாறை 12ம் வீதி


நாதி அற்றுப் போய்க் கிடக்கும் வீதி.


(மக்கள் நண்பன், சம்மாந்துறை அன்சார் – இலங்கை).




சம்மாந்துறை உடங்கா – 01,  கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட அம்பாறை 12ம் வீதியின் கோலமே இது.
இது அம்பாறை பிரதான வீதியினைச் சென்றடையும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த இதே அலங்கோலத்தில் தான் இன்றும் இந்த வீதி காட்சி அளிக்கின்றது.
பொழுதாகி விட்டால் பழுதாகிவிட்ட இந்த வீதியில் பயணிக்கவே பயமாக இருக்கும். அந்த அளவு இருள் சூழ்ந்த வண்ணம் காட்சி அளிக்கும் இந்த வீதி.
மேலும் மழைக்காலம் வந்தால் இதன் அருமை பெருமை சொல்லித் தீராது.
இந்த வீதியில் ஜலாலியா பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக செல்லும் வயதானவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றார்கள், குறிப்பாக அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைக்கு செல்லும் போது வீதியில் சறுக்கி விழுவதாக என்னிடம் முறைப்படுகிறார்கள்.
எத்தனோயோ தடவை அரசியல்வாதிகள் இந்த வீதியை வந்து பார்த்து குறித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் ஆனால் யாரும் இதுவரை திருத்தி விட்டுச் செல்லவில்லை.
இப்போது இந்த வீதியிலும், பிரதேசத்திலும் வசிக்கும் அத்தனை குடும்பங்களும் என்னோடு முறைப்படுகிறார்கள் இந்த வீதியை திருத்தம் செய்து தராமல் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்குக்காக எவரும் வரத் தேவையில்லை என்று.
இந்த வீதியின் அத்தனை அவலத்தையும் நானும் நன்கு அறிவேன், இந்த வீதியில் வசிக்கும் அத்தனை மக்களது ஆதங்கத்தையும் நான் நன்கு அறிவேன். காரணம் நானும் இந்த வீதியில்தான் குடி இருக்கின்றேன்.
ஆகவே..!!! தயவு செய்து சம்மாந்துறை பிரதேச சபையும், வீதித் திருத்தம் தொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்த வீதியை  மக்கள் நலன் கருதி கொங்ரீட் வீதியாக திருத்தம் செய்து தருமாறு தாழ்மையுடம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.

No comments:

Post a Comment