Wednesday, June 4, 2014

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 23 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல். இந்திய பொலிஸாரால் 3 பேர் கைது

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட

23 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்.

இந்திய பொலிஸாரால் 3 பேர் கைது

ராமநாதபுரம் அருகே காரில் பல கோடி மதிப்புள்ள 23.5 கிலோ தங்கத்தை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த 3 பேரை இந்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட இந்த தங்கத்தை அவர்கள் சென்னைக்கு எடுத்து செல்ல முயன்றது தெரிய வந்திருக்கிறது.ராமநாதபுரம் மாவட் டம், கீழக்கரையில் இருந்து காரில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர்கள் தூத்துக்குடி மற்றும் கோவை மத்திய வருவாய் புலனா ய்வு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தூத்துக்குடி மற்றும் கோவையை சேர்ந்த மத்திய புலனாய்வு துறையினர் கீழக்கரை - ராமநாதபுரம் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் பால்கரை என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் காரின் பின் சீட்டுக்கு கீழே கால் விரிப்பின் அடியில் 23.5 கிலோ எடையுள்ள 82 தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றுக்கான ஆவணங்கள் குறித்து கேட்டபோது, காரில் இருந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து வருவாய் புலனாய்வு துறையினர் ரூ.6.5 கோடி மதிப்புள்ள 82 தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.ராமநாதபுரம் கஸ்டம்ஸ் அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்று, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அக்பர் அலி ( வயது34), மண்ணடியை சேர்ந்த யாசர் அராபத் (வயது 29) மற்றும் சையது அபுதாகீர் (வயது 29) என்பது தெரிந்தது. இலங்கையில் இருந்து படகு மூலம் இந்த தங்கக்கட்டிகள் கீழக்கரை பகுதிக்கு கடத்தி வரப்பட்டதாகவும்அங்கு இந்த கட்டிகளை பெற்றுக் கொண்டு சென்னைக்கு கொண்டு செல்வதாகவும் கைதான 3 பேரும் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட அக்பர் அலி உள்ளிட்ட 3 பேரிடமும் மத்திய புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலினடிப் படை யில் இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தது யார்யாருக்காக இந்த தங்கம் கடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்கைது செய்யப்பட்ட 3 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் நேற்று மாலை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment