Sunday, June 22, 2014

முஸ்லிம்களின் பூர்வீகம் அறிந்த மகா சபையொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும். சேகு இஸ்ஸத்தீன், எம்.ஐ.எம்.முஹைத்தீன் போன்றவர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்

முஸ்லிம்களின் பூர்வீகம் அறிந்த மகா சபையொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும். சேகு இஸ்ஸத்தீன், எம்.ஐ.எம்.முஹைத்தீன் போன்றவர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்
றிஸ்வியூ முகம்மத் நபீல்




தலைவருக்கு,அஸ்ஸலாமுஅலைக்கும்!
உண்மையில்லாத,பேதலிக்கும் வாழையிலைப் பேயர்கள் நமது கட்சிக்குள் மலிந்து விட்டார்கள்.ஒரே ஒரு தலைமையால் மட்டும்தான் சிரிக்கவும் அழவும் வேண்டியிருக்கிறது.முட்டுக்கு வைத்த கம்பு கூட கொஞ்சம் தளை விட்டதும் தலைவர் ''போஸ்ட்'' கேட்கிறது.
இந்த ஓசிலுக்குள்ள நாம தலைமையை விமர்சிக்கிறதும்,நார் நாராக் கிழிக்கிறதும் உசிதமான செயல்களா இதுகள்? இந்த விடயத்தில் தலைமை கொஞ்சம் சிந்திக்கக் கடவது,உங்களால் தலை சுற்றும் மட்டும் மாரடித்து பினாறு பிடுங்கி கெட்ட பெயர் எடுப்பதை விட,உங்கள் மேசையைச் சுற்றி நல்ல தலைகளும் அமர்ந்திருக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம்களின் பூர்வீகம் அறிந்த மகா சபையொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.அதில் சேகு இஸ்ஸத்தீன், எம்..எம்.முஹைத்தீன் போன்றவர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்

நீங்கள் தனியாகப் போராடியும் நன்றியில்லாமல் நரம்பில்லாத நாக்குகள் அவல் இடிக்க மனம் ''சுள்'' என்கிறது.உங்களைச் சுற்றியிருக்கும் வட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை.சிலர் போட்டோவுக்கு ''போஸ்'' கொடுக்கவே நிற்கிறார்கள்.உங்கள் தியாகங்கள் நீங்கள் இருக்கும்வரை தெரியப் போவதில்லை.நீங்கள் நிற்கும் இடம் விஷம் நிறைந்த காடு.பக்கத்தில் நல்ல பயன்தரு மூலிகைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு நில்லுங்கள் .எந்தப் புற்றுக்குள் என்ன பாம்பு இருக்கிறது என்று கூற முடியாது.

No comments:

Post a Comment