Monday, June 30, 2014

ஜெனிவாவில் ஐநா முன்பாக புலம்பெயர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


ஜெனிவாவில் ஐநா முன்பாக

புலம்பெயர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


இலங்கையின் அளுத்கம, தர்கா நகர், பேருவளை உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து  சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக ஐரோப்பிய முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் என்ற அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு கூடிய நூற்றுக்கணக்கான இலங்கையின் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்ட, வன்செயலுக்கு எதிராகவும்.முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரியும் கோஷங்களை  எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா விசாரணைக்குழு விசாரணை நடத்தும் பொழுது, இலங்கையில் அண்மையில் சிங்கள கடும்போக்குவாத பொதுபல சேனா அமைப்பினரால் அளுத்கம. தர்கா நகர் மற்றும் பேருவளை நகரங்களில் நடத்தப்பட்ட வன்செயல்கள் குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.





No comments:

Post a Comment