Monday, June 23, 2014

குழப்பக்கார வஞ்சகர்களால் முஸ்லிம்களின் வீடுகள் எனக் கருதி சிங்கள மக்களின் வீடுகளும் எரிப்பு. சிங்கள ஊடகம் ஒன்று முஸ்லிம்கள்மீது குற்றச்சாட்டு


குழப்பக்கார வஞ்சகர்களால் முஸ்லிம்களின் வீடுகள் எனக் கருதி
சிங்கள மக்களின் வீடுகளும் எரிப்பு.

சிங்கள ஊடகம் ஒன்று முஸ்லிம்கள்மீது குற்றச்சாட்டு

அளுத்கம பிரதேசத்தை நன்கு அறிந்திராத வெளிப்பிரதேசத்தில் இருந்து வருகை தந்திருந்து குழப்பத்தை ஏற்படுத்திய வஞ்சகர்களால் சிங்கள மக்களின் வீடுகளையும் முஸ்லிம்களின் வீடுகள் எனக் கருதி தாக்கி எரித்த சம்பவங்களும் இடம்பெற்றிருக்கிறது.
அந்த வஞ்சகர்களின் இச்செயலை மூடி மறைத்து முஸ்லிம் மக்கள் செய்துள்ளதாகக் காட்டி லங்காதீப செய்தி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது................................................

எரியும் நெருப்பில் எண்ணெய் :

அழுத்கமவில் முஸ்லிம்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி
 சிங்களவர்களின் 35 வீடுகளை தாக்கினார்களாம் !!

ஊற்றுகிறது லங்காதீப

அளுத்கமவில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் குழுக்கள் பெற்றோல் குண்டுகளை சிங்கள மக்களின் வீடுகளின் மீது வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் 35க்கு மேற்பட்ட சிங்களவர்களின் வீடுகள் தீக்கிரையாகி உள்ளதாகவும் லங்காதீப என்ற சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
சில ஊடகங்கள் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மட்டுமே வெளியிடுவதாகவும் சிங்களவர்களுக்கு முஸ்லீம்களால் ஏற்பட்ட பாதிப்பை வெளியிடுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment