Tuesday, June 24, 2014

பொதுபல சேனாவின் கண்டி சமய வழிபாட்டு நிகழ்வு தடை செய்யப்பட மாட்டாது இன வன்முறைகளைத் தூண்டினால் கடும் நடவடிக்கை - பொலிஸார் தெரிவிப்பு

பொதுபல சேனாவின் கண்டி சமய வழிபாட்டு நிகழ்வு
தடை செய்யப்பட மாட்டாது
இன வன்முறைகளைத் தூண்டினால் கடும் நடவடிக்கை
- பொலிஸார் தெரிவிப்பு



பொதுபல சேனா இயக்கத்தினால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று நடத்தப்பட உள்ள சமய வழிபாட்டு நிகழ்வு தடை செய்யப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.    அவர் மேலும் தெரிவிக்கையில்:-   பொதுபல சேனா இயக்கம் அதிஷ்டான பூஜையொன்றை நடத்த உள்ளதாகவும் அதனை நடத்த தலதா மாளிகை நிர்வாகத்தினரிடம் அனுமதி கோரியிருந்ததாகவும் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் இதனால் இந்த நிகழ்வு நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.     இருப்பினும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது இன வன்முறைகளைத் தூண்டவோ இந்த சமய நிகழ்வு பயன்படுத்திக்கொள்ளப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.   இதேவேளை கொழும்பு மஹிங்கனை, மற்றும் கண்டியை சேர்ந்த 300 முதல் 400 பௌத்த பிக்குகளின் பங்களிப்புடன் இந்த சமய நிகழ்வை நடத்த உத்தேசித்துள்ளதாக பொதுபல சேனா இயக்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment