Sunday, June 1, 2014

கோபி அனானை அனுமதிப்பது தொடர்பில் இன்னும் முடிவில்லை; விசாரணைக்குழுவை ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் மாற்றமில்லை; அரசு தெரிவிப்பு.


கோபி அனானை அனுமதிப்பது தொடர்பில் இன்னும் முடிவில்லை;

விசாரணைக்குழுவை ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் மாற்றமில்லை;


அரசு தெரிவிப்பு.



ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளரான கோபி அனானுக்கு விசா வழங்குவது குறித்து இலங்கை அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் விசாரணைக்குழு அமைக்கப்படுவதை இலங்கை அரசு ஒரு போதும் ஏற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  
 கோபி அனானுக்குரிய நுழை விசைவு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் வினவிய போதே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.   இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவதுஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு குறித்த முடிவில் இலங்கை அரசானது தெளிவானதொரு முடிவிலேயே இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போதே, இலங்கை அரசானது விசாரணைக் குழுவை ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்து விட்டது. இந்த நிலையில், ஜூன் மாத நடுப் பகுதிக்குள் இலங்கைக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்பதை அரசு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.   இவ்விசாரணைக் குழுவின் தலைவராக செயற்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளரான கோபி அனானுக்கு விசா வழங்குவது குறித்து இலங்கை அரசு இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை.    இது குறித்த எந்தவித குழப்பங்களும் அரசுக்குள் இல்லை''என்று தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment