Saturday, June 28, 2014

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் அச்சம்! - ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு


இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் அச்சம்!

-    ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு


இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் அச்சம் நிலவுவதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.   பொருளாதாரத்துறை மாத்திரமின்றி பல்வேறு துறைகளில் நிலவும் வீழ்ச்சியே இந்த அச்சத்திற்கான காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 கினிகத்ஹேனஅம்பகமுவ பிரதேசத்தில் இடம் பெற்ற சந்திப்பொன்றில் எதிர்கட்சி தலைவர் உரைநிகழ்த்துகையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை, பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னிறுத்தி பெற்றுக் கொண்ட கடன்களை மீணடும் செலுத்த முடியாத வங்குரோத்து நிலையில் அரசாங்கம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.   வெளிநாடுகளிடம் இருந்து அரசாங்கம் கணக்கின்றி கடன்களை வாங்கிக் குவித்துள்ளது. இதற்கான தரகு பணத்தையும் பெற்றுக் கொண்டது. ஆனால் வேலைத்திட்டங்கள் சரியாக அமையவில்லை.   கடனுக்கான வட்டியை செலுத்தவும், கடனை மீண்டும் கட்டி முடிக்குவும் முடியாத நிலையில் அரசாங்கம் தற்போது நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment