Saturday, June 28, 2014

இலங்கைக்குள் கடத்தி கொண்டுவர இருந்த போதைப் பொருள்கள் வேதாரண்யத்தில் பறிமுதல்



இலங்கைக்குள் கடத்தி கொண்டுவர இருந்த போதைப் பொருள்கள்
வேதாரண்யத்தில் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த இருந்த  23 கிலோ போதைப் பொருளை வேதாரண்யத்தில்  இன்று காலை பொலிஸார் பறிமுதல் செய்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக மோட்டாண்டி தோப்பை சேர்ந்த பழநி 26 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இருந்த ஒருவர் தப்பியோடியதால் அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போதை பொருள் கஞ்சா வகையை சேர்ந்தது எனவும் மொத்தம் 10 பாக்கெட்டுகளில் 23 கிலோ 420 கிராம் எடை கொண்ட இவற்றை கைபற்றிய பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment