போதையில் மாணவர்களுடன் ஆபாச நடனம்
பாடசாலை ஆசிரியையின் பதவி இடை நிறுத்தம்

அமெரிக்காவில் உள்ள புளோரிடோ  மாகாணத்தின் ஒரு பாடசாலை ஆசிரியை மாணவர்களுடன் சேர்ந்து போதையில் கேபரே டான்ஸ் ஆடியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியையின் இச் செயல்பாடு  மாணவர்களின் பெற்றோர்களை அதிர்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது:-
அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள  புளோரிடா கீ மேன்பாடசாலையில்  உடற்பயிற்சி ஆசிரியையாகவும், ஸ்பாட்பால்  பயிற்சியாளராகவும் இருக்கும் கவ்ர்ட்னி ஸ்பெருல் என்ற ஆசிரியை கடந்த ஏப்ரல் மாதம்  பாடசாலை முடியும் கடைசி நாளில் மாணவர்களை கடற்கரை ஒன்றிற்கு அழைத்து சென்று பார்ட்டி ஒன்று வைத்துள்ளார்.

அந்த பார்ட்டியில் அவர்  மது அருந்தி உள்ளாடை மட்டும் அணிந்து மாணவர்கள் முன் ஆபாச நடனம் ஆடியுள்ளார். இந்த சம்பவம் தற்போதுதான் மாணவன் ஒருவனின் மூலம் வெளியே தெரிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேபரே டான்ஸ் ஆடும் ஆசிரியையை மாணவன் ஒருவன் வீட்டியோ எடுத்து உள்ளான். பாடசாலை நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து விசாரணை செய்து ஆசிரியை 15 நாட்களுக்கு பதவியை இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்த ஆபாச நடன நிகழ்ச்சியை கேள்விப்பட்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்து ஆசிரியைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top