Tuesday, July 29, 2014

ஆப்கானில் ரமழான் நிகழ்வில் தாக்குதல் அதிபர் கர்சாயின் உறவினர் பலி

ஆப்கானில் ரமழான் நிகழ்வில் தாக்குதல்
அதிபர் கர்சாயின் உறவினர் பலி


அதிபர் கர்சாயின் உறவுமுறை சகோதரர் ஹஷ்மத் கர்சாயின் வீட்டில் நடந்த ரமழான் நிகழ்வின்போது,தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹஷ்மத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரமழான் பெருநாள் உலகெங்கும் கொண்டாடப்படும் நிலையில், இதனை முன்னிட்டு கந்தஹாரில் வசித்துவரும் அதிபர் ஹமீது கர்சாயின் உறவுமுறை சகோதரர் ஹம்ஷத் கர்சாய், தனது இல்லத்தில் பொது மக்களுக்காக விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள், ஹம்ஷதுக்கு வாழ்த்து கூறுவதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்திலிருந்து வாழ்த்து கூறுவதாக வந்த நபர் ஒருவர் ஹம்ஷதை கட்டி தழுவியபோது பயங்கர சத்தத்தோடு குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஹஷ்மத் கர்சாய் உயிரிழந்தார்.
ஆப்கனில் கடந்த சில நாட்களாகவே, தாலிபான் போராளிகள் தொடர் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். அதிபர் தேர்தலில் வேட்பாளரான அஷ்ரப் கானியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஹம்ஷத் கர்சாய் ஈடுப்பட்டு வந்தார். இதன் அடிப்படையில் அவருக்கு சில மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது.

ரமழான் தினத்தன்று ஹஷ்மத் கொல்லப்பட்டதை அடுத்து, ஆப்கானில் பதற்ற நிலை நிலவுகிறது. பல இடங்களில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. சம்பவ நடந்த ஹஷ்மதின் இல்லம் சோதனைக்காக அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

No comments:

Post a Comment