Wednesday, September 3, 2014

துஸ்பிரயோகத்தின் பின் யுவதி கொலை டாக்டருக்கு மரணதண்டனை

துஸ்பிரயோகத்தின் பின் யுவதி கொலை

டாக்டருக்கு மரணதண்டனை

யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி ஆறாம் மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த யுவதியான சமிலா 2007 ஆம் ஆண்டு, சிகிச்சைக்காக கொள்ளுப்பிட்டி வைத்தியசாலைக்கு சென்றவேளை சந்தேக நபரான வைத்தியர் யுவதிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.   அதன் பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து யுவதியை கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைதுசெய்யப்பட்டார்.    அவருக்கு எதிரான வழக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 







No comments:

Post a Comment