Monday, October 13, 2014

மூக்கு பகுதியில் ஒரு மாதம் காலம் இருந்த‌ மூன்று அங்குல அளவிலான அட்டை பூச்சி ! மருத்துவ சிகிச்சை மூலம் அகற்றல்


மூக்கு பகுதியில் ஒரு மாதம் காலம் இருந்த‌
மூன்று அங்குல அளவிலான அட்டை பூச்சி !
மருத்துவ சிகிச்சை மூலம் அகற்றல்


இளம் பெண் ஒருவரின் மூக்கு பகுதியில் இருந்த மூன்று அங்குல அளவிலான அட்டை அகற்றப்பட்டது. அவர் நீச்சல் மேற்கொண்ட போது மூக்கிற்குள் நுழைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த லிவரணி என்ற‌ 24 வயது இளம் பெண் ஒருவர் தென் கிழக்கு ஆசியா சுற்று பயணம் மேற்கொண்ட போது மூக்கிலிருந்து இரத்தம் வழிந்துள்ளது. ஒரு முறை பைக் விபத்தில் கிழே விழுந்ததால் மூக்கிலிருந்து இரத்தம் வருகிறது என்று எண்ணியுள்ளார் ஒரு மாத காலம் இப்பிரச்சனை அவருக்கு இருந்துள்ளது.பின்னர் இங்கிலாந்து திரும்பியவுடன் மருத்துவ சோதனை செய்த போது மூக்கில் மூன்று அங்குல அளவில் அட்டை பூச்சி இருப்பதை கண்டறிந்தனர்உடனடியாக சிகிச்சை செய்து 3 அங்குல அட்டையை அகற்றினர்.

No comments:

Post a Comment