Friday, November 28, 2014

நைஜீரியா மசூதியில் குண்டு வெடிப்பு 120 பேர் பலி 270 பேர் காயம்


நைஜீரியா மசூதியில் குண்டு வெடிப்பு
120 பேர் பலி 270 பேர் காயம்



நைஜீரியாவில் உள்ள மசூதியில் நேற்று நடந்த இரண்டு குண்டு வெடிப்பில் 120 பேர் பலியாயினர், 270 பேர் காயம் அடைந்தனர் என அறிவிக்கப்படுகின்றதுநைஜீரியாவின் கானோ நகரில், மதத் தலைவர் 2ம் அமீர் முகம்மது சானுசியின் அரண்மனை வளாகத்தில் உள்ள பெரிய ஜுமா மசூதியில் நேற்று வழக்கம் போல் தொழுகை நடந்தது. இங்கு நேற்று மதியம் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் சிக்கி 120 பேர் பலியாயினர் 270 பேர் காயம் அடைந்தனர். நைஜீரியாவில் போராடி வரும்போகோ ஹரம்தீவிரவாதிகளுக்கு எதிராக மக்கள் ஆயுதங்களை தூக்க வேண்டும் என முகமது சானுசி, இதே மசூதியில் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பழிவாங்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment