Thursday, November 27, 2014

ஆஸ்திரேலியா வீரர் மரணம் மனமுடைந்து காணப்படும் வேகப்பந்து வீச்சாளர் சியான் அபோட்


ஆஸ்திரேலியா வீரர் மரணம்
மனமுடைந்து காணப்படும

வேகப்பந்து வீச்சாளர் சியான் அபோட்


ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் தர போட்டியான ஷெபீல்டு ஷீல்டு தொடரில் நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சியான் அபோட் வீசிய பவுன்சரில், தெற்கு ஆஸ்திரேலிய அணி வீரர் பில் ஹியூஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, சிட்னியில் உள்ள செயின்ட் வின்சன்ட் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவருக்கு, தலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் கோமா நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவருக்கு பந்து வீசிய சீன் அப்பார்ட்டை பெரிதும் பாதித்துள்ளது.

22 வயதான சீன் அப்பார்ட்டால் இந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. சம்பவத்தனறு பந்து வீச்சால் சுண்டு விழுந்த ஹியூக்ஸை தூக்கிச் சென்ற ஸ்ட்ரக்சரின் பின்னாலேயே ஓடிச் சென்றார். மருத்துவமனைக்கு சென்றும் நலம் விசாரித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹியூக்ஸ் உயிரிழந்தை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து அணி வீரர்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சியான் அபோட் சோர்ந்துவிடக்கூடாது என்று பிரட்லீ, மெக்ராத் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment