Thursday, December 4, 2014

ஆளும் கட்சியின் தெல்தெனிய – மெததும்பர பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோற்கடிப்பு



ஆளும் கட்சியின் தெல்தெனிய – மெததும்பர பிரதேச சபையின்
வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோற்கடிப்பு


ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தெல்தெனியமெததும்பர பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
 மெததும்பர பிரதேச சபையில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் இவர்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 11 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 உறுப்பினர்களும் உள்ளனர்.
 இன்றைய வரவு செலவுத் திட்டத்தின் போது ஆளும் கட்சியின் 5 உறுப்பினர்கள் சபைக்கு வருகை தராத நிலையில் பிரதேச சபைத் தலைவரால் வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது
 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 6 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாகளிக்கப்பட்டதன் காரணமாக தெல்தெனியமெததும்பர பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

No comments:

Post a Comment