Friday, December 5, 2014

கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா முன்னாள் அமைச்சர் மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்


கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு  விழா
முன்னாள் அமைச்சர் மன்சூர்
பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்

கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில் இடம்பெற்ற ( 11/05 Felicitation Ceremony of cricket champions and sports achievers ~ 2014 ) பரிசளிப்பு  விழாவில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ்,ஏ,ஆர்,மன்சூர் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இவ்வைபவத்தில் முன்னாள் அமைச்சர் மன்சூரின் பாரியார் ஜனாபா ஸொஹறா மன்சூர் அவர்களும் கலந்து கொண்டார்.

அதிபர் பீ.எம்.எம்.பதூர்தீன் தலைமையில் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.










No comments:

Post a Comment