Friday, December 5, 2014

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாவுடனேயே எனக்கு போட்டி -மஹிந்த ராஜபக்ஸ


ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாவுடனேயே எனக்கு போட்டி

மஹிந்த ராஜபக்ஸ

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனேயே தான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  தெரிவித்துள்ளார்.  
இன்று 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் வைத்து தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்த போதே ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
தான் போட்டியிடுவது சந்திரிகாவுடனேயே. இது மங்களசந்திரிகா கூட்டாகும். என்னோடு போட்டியிடத் தகுதி வாய்ந்தவர் ரணில் என்றே நான் நினைக்கிறேன்

 இதேவேளைஅமைச்சரவை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் கோப்புகள் குறித்தே நான் அன்று கூறினேன்கெபினட் பத்திரமொன்றை வெளியிட முடியாது தானே.   அவை இரகசியமானவை  ஆனால், நான் சொன்னதை ஊடகங்கள் தவறாக விளங்கி செய்தி வெளியிட்டன. எனக்கு தொலைபேசி அழைப்பை  மேற்கொண்டு இதைப்பற்றி விசாரித்திருந்தால் நான் விளக்கம் கொடுத்திருந்திருப்பேன், என அவர் குறிப்பிட்டுள்ளார்   அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment