Monday, February 2, 2015

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு
எதிர்வரும் 11ஆம் திகதி  வரை விளக்கமறியல்



ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும் ஒரு சில தினங்கள் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்தவருமான  திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கையொப்பங்களை போலியான  முறையில் பயன்படுத்தி ஆவணம் ஒன்றை தயாரித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment