Tuesday, February 3, 2015

பிரபல நடிகை ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி நகைகள் திருட்டு

பிரபல நடிகை ரம்பா வீட்டில்

ரூ.4.5 கோடி நகைகள் திருட்டு


பிரபல நடிகை ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி (இந்திய நாணயப் பெறுமதி) நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் 1990-களில் ரம்பா முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. 'உள்ளத்தை அள்ளித்தா’, சுந்தரபுருஷன், செங் கோட்டை, அருணாசலம், வி..பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் இவர்  நடித்துள்ளார்.
2010-ல் கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டோரண்டோவில் வசிக்கிறார்.தற்போது டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.

ரம்பாவுக்கு சென்னை யிலும் ஐதராபாத்திலும் வீடுகள் உள்ளன. ஐதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்து இருந்தார். அந்த நகைகள்தான் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் ரம்பாவின் அண்ணன் வசிக்கிறார். அவர் வெளியே சென்று இருந்த போது யாரோ வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றுள்ளனர். ரொக்க பணமும் திருட்டு போய் உள்ளதாவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment