Thursday, February 26, 2015

92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி (படங்கள்)

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி-2015
92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி


உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் வங்க தேச அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
333 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 47 ஓவர்களில் 240 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இலங்கை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, பூவா தலையா வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 332 ரஓட்டங்களை எடுத்தது.
இலங்கை வீரர்கள் குமார் சங்ககாராவும், திலகரத்ன தில்ஷானும் வங்கதேச பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் ஓடவிட்டனர்.

சங்ககார 76 பந்துகளில் 1 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்களும், தில்ஷான் 146 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 161 ஓட்டங்களை எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடக்க வீரர் திரிமண்ணே 52 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.








No comments:

Post a Comment