Wednesday, February 25, 2015

இலங்கை அணி பேட்டிங் தேர்வு

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
இலங்கை அணி பேட்டிங் தேர்வு

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில்  இன்றுபிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மெல்போர்னில் இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு இலங்கை-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.
இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளதுஇலங்கை-வங்காளதேச அணிகள் இதுவரை 37 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 32-ல் இலங்கையும், 4-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றிருக்கின்றன.
ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக் கிண்ணத்தை  எடுத்துக் கொண்டால், இலங்கை அணி வங்காளதேசத்திடம் தோற்றதில்லை. சந்தித்த இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.
வங்காளதேசத்திற்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கும் இலங்கை விக்கெட் கீப்பர் 37 வயதான சங்கக்காரவுக்கு இது 400-வது ஒரு நாள் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 4-வது வீரர் சங்கக்கார ஆவார்.





No comments:

Post a Comment