Saturday, February 28, 2015

சட்டத்தணி ஆரிப் சம்சுதீன் முஸ்லிம் காங்கிரஸினால் முதன்மைபைப்படுத்தப்படுன்றாரா? அப்படியானால். . ??

சட்டத்தணி ஆரிப் சம்சுதீன்

முஸ்லிம் காங்கிரஸினால் முதன்மைபைப்படுத்தப்படுன்றாரா?

திகாமடுல்ல மாவட்டத்தில் நிலவும் கருத்து

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸில் இணைந்திருக்கும்   மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி  ஆரிப் சம்சுதீன் முஸ்லிம் காங்கிரஸினால் தற்போது முதன்மைபைப்படுத்தப்படும் ஒரு நபராக இருந்து வருகின்றார் என அறிவிக்கப்படுகின்றது. இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளால் அதிகம் பேசப்படுவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
திகாமடுல்ல மாவட்டத்தில் குறிப்பாக கல்முனைத் தேர்தல் தொகுதியில் இவர் முதன்மைப்படுத்தப்படுகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரிப் சம்சுதீன் ஒரு சிறந்த அரசியல் பின்னனியைக் கொண்டவர். ஆரிப் சம்சுதீனை சிறந்த அரசியல் வாதியாக நான் பார்க்கின்றேன். அவரது அரசியல் வாழ்வு மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்”.. இவ்வாறு கல்முனை மாநகர பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான .எல்.அப்துல் மஜீட் கூட அவரை புகழ்ந்து அவரின் எதிகால அரசியலுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கல்முனையில் இடம்பெற்றவாழ்வின் ஒளிவாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இப்படி குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் .எல்.அப்துல் மஜீட் , மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பற்றி மேலும்  வாழ்த்திக் கூறுகையில்,
ஆரிப் சம்சுதீனை சிறந்த அரசியல் வாதியாக நான் பார்க்கின்றேன். அவரது அரசியல் வாழ்வு மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்என்று .எல்.அப்துல் மஜீட் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கல்முனைத் தேர்தல் தொகுதியை மையமாக வைத்து சட்டத்தரணி  ஆரிப் சம்சுதீன் முதன்மைப்படுத்தப்படுகின்றாரோ எனவும் அரசியல் அவதானிகள் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
அப்படியானால். . .? ? ? ? 

No comments:

Post a Comment