Tuesday, March 31, 2015

ஐசிசி தரவரிசை இரண்டாவது இடத்தைப் பிடித்த இலங்கை வீரர் ( விபரங்கள் இணைப்பு )

ஐசிசி தரவரிசை

 இரண்டாவது இடத்தைப் பிடித்த இலங்கை வீரர்


உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை வீரரான குமார் சங்ககார இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். திலகரத்ன டில்ஷான் 5வது இடத்திற்கு வந்துள்ளார்.   
ஐசிசி வெளியிட்டுள்ள கிரிக்கெட் துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த  AB de Villiers முதலாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஹாஷிம் அம்லா 3வது இடத்திற்கு வந்துள்ளார்.
இத் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 4வது இடத்தையும் ஷிகர் தவான் 6வது இடத்திலும் உள்ளனர்.

கோலி மற்றும் தவானைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் தோனி 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.



No comments:

Post a Comment