Friday, May 1, 2015

20 ஓவர் போட்டிக்கான தர வரிசைப் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில்

20 ஓவர் போட்டிக்கான தர வரிசைப் பட்டியலில்
இலங்கை முதல் இடத்தில்

20 ஓவர் போட்டிக்கான தர வரிசைப் பட்டியலில் இலங்கை 135 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்தியா 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 122 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
இதேவேளை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தர வரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 129 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடம் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து இந்திய அணி 117 புள்ளிகளடன் 2வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 116 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா 112 புள்ளிகளுடன், 4வது மற்றும் இலங்கை அணி 106 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.

No comments:

Post a Comment