Monday, May 25, 2015

மருதானை ஹோட்டலில் தீ; பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு (படங்கள் இணைப்பு)

மருதானை ஹோட்டலில் தீ

பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரிப்பு

(படங்கள் இணைப்பு)

மருதானை கலீல் தனியார் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டலில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீயினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. குறித்த ஹோட்டேல் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
அந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வாகனங்கள் ஆறு பயன்படுத்தப்பட்டதாகும். சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே தீ, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

கொத்து ரொட்டி தயாரிப்பதற்காக பயன்படுத்தும் அடுப்புக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் வெடித்ததினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீயையடுத்து கிளம்பிய புகையை உள்ளிழுக்கும் போது  ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வெதுப்பகம் ஒரு மாடியைக் கொண்டது என்றும் மாடிப்பகுதிக்கும் தீ பரவியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த வெதுப்பகத்துக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.



















No comments:

Post a Comment