Friday, May 1, 2015

ஐ.எஸ். இயக்க தலைவர் அல் பாக்தாதிக்கு டாக்டர்கள் சிகிச்சை ‘கார்டியன்’ பத்திரிகையில் தெரிவிப்பு

ஐ.எஸ். இயக்க தலைவர் அல் பாக்தாதிக்கு டாக்டர்கள் சிகிச்சை
‘கார்டியன் பத்திரிகையில் தெரிவிப்பு

அமெரிக்க குண்டு வீச்சில் .எஸ். இயக்க தலைவர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாகவும், அவரை டாக்டர்கள் ரகசிய இடத்தில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் கணிசமான பகுதிகள் .எஸ். இயக்க போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஈராக்கின் வட பகுதியில் மொசூல், திக்ரித் உள்ளிட்ட சில நகரங்களும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் .எஸ். போராளிகளின் வசம் உள்ளது. .எஸ். போராளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஈராக் படைகள் தொடர்ந்து அவர்களுடன் போரிட்டு வருகின்றன. ஈராக்கில் அந்த நாட்டின் ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க போர் விமானங்கள் .எஸ். போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் .எஸ். இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் மொசூல் நகருக்கு மேற்கே 128 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்பாஜ் என்ற இடத்தில் அமெரிக்க போர் விமானம் குண்டு வீசியதில் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாகவும், இதனால் அவரை ரகசிய இடத்தில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

குண்டு வீச்சில் அல் பாக்தாதிக்கு முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரை ஒரு ரகசிய இடத்தில் வைத்து 2 டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.அல் பாக்தாதிக்கு ஏற்பட்ட காயம் பெரியது என்பதால் அவரால் இனி .எஸ். இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக அந்த இயக்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாகவும்  ‘கார்டியன்பத்திரிகையில் எழுதப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment