Monday, May 25, 2015

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரை 5 ஆயிரம் காசுப்பிணையிலும் பத்து இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டோக்கியோவிலிருந்து நேற்று நாடு திரும்பிய ஞானசார தேரர்  கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் இன்று காலை வாக்குமூலம் ஒன்றை அளித்தன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஞனசார தேரரை கருவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது 5 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் பத்து இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





No comments:

Post a Comment