Friday, May 29, 2015

இது எப்படியிருக்கிறது? கல்முனை மாநகர சபையின் கவனத்திற்கு

இது எப்படியிருக்கிறது?

கல்முனை மாநகர சபையின் கவனத்திற்கு


கல்முனை நகர் ( PRIVATE BUS STAND BUILDING )  தனியார் பஸ் நிலையத்திற்கென பல இலட்சம் ரூபா செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட அழகான ஒரு கட்டடம் இன்று மோட்டார் சைக்கிள்களின் தரிப்பிடமாக மாறியுள்ள பரிதாப நிலையையே இங்கு காண்கிறீர்கள்.
சில மாதங்களுக்கு முன் இந்த தனியார் பஸ் நிலையக் கட்டடம் கட்டாக்காலி மாடுகள் கழிவுகளை இட்டுச் செல்லும் இடமாகவும்  பிச்சைக்காரர்கள் படுத்து உறங்கும் இடமாகவும் வழங்கப்பட்டது போல் காட்சி தந்தது.
தற்போது இக் கட்டடம் மோட்டார் சைக்கிள்களின் தரிப்பிடமாக மாறியுள்ளது. கல்முனை மாநகர சபை இக்கட்டடம் தொடர்பாக பாராமுகமாக உள்ளதா? இல்லை கல்முனை மாநகர சபையின் நன்கு திட்டமிடாத வேலைகளில் இதுவும் ஒன்றா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கல்முனை நகர் ( PRIVATE BUS STAND BUILDING )  தனியார் பஸ் நிலையக் கட்டடம் தொடர்பாக ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியை மீண்டும் இங்கு பதிவேற்றம் செய்கின்றோம்.

கல்முனை நகர் தனியார் பஸ் நிலையத்தின் அவல நிலை!
கல்முனை மேயரே இது உங்களின் கவனத்திற்கு!!

ல்முனை நகர் ( PRIVATE BUS STAND BUILDINGதனியார் பஸ் நிலையத்தின் அவல நிலை குறித்து பயணிகள் கவலை தெரிவிப்பதுடன் இது சம்மந்தமாக உரியவர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இக்கட்டடத்திற்குள் பயணிகள் அமரக்கூடியவாறு கதிரை வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என பயணிகளால் விசனம் தெரிவிக்கப்படுவதுடன் இக்கட்டடம் அழகாகக் கட்டப்பட்டு கட்டாக்காலி மாடுகள் கழிவுகளை இட்டுச் செல்லும் இடமாகவும்  பிச்சைக்காரர்கள் படுத்து உறங்கும் இடமாகவும் வழங்கப்பட்டிருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
 கல்முனை மாநகர சபையின் பராமரிப்பில் இருக்கும் இக்கட்டடம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி கல்முனை மாநகர  முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபின் அழைப்பின் பேரில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
 இக்கட்டடத்தில் அலுவலக அறை ஒன்றும் மலசல கூடம் ஒன்றும் பயணிகளின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ளது. அவைகள் கூட தொடர்ந்து பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
 மாபிள் கற்கள் கொண்டு தரை அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தில் பிச்சைகாரர்கள் உறங்கிக் கொண்டிருப்பதையும் தனியார் பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் கால்களை நீட்டியவாறு படுத்துக் கொண்டிருப்பதையும் சில வேளை மாடுகள் களைப்பாறி கழிவுகளை இட்டுச் சென்றிருப்பதையும்  காணக்கூடியதாக உள்ளது.
இது மாத்திரமல்லாமல் இப்பஸ் நிலையம் மழை பெய்யும் காலங்களில் நீரில் மூழ்கி பயணிகளுக்கு அசெளகரியங்களையும் ஏற்படுத்துவதாகவும் குறை தெரிவிக்கப்படுகின்றது.
 கல்முனை நகரின் முகப்பில் அமைந்துள்ள இப் பஸ் நிலையக் கட்டடம் திறக்கப்பட்டு 3 வருடங்களைக் கடந்துவிட்ட போதிலும் ஏன் இக்கட்டடம் சரியான முறையில் பராமரிக்கப்படுவதாக இல்லை பயணிகளின் பாவனைக்கு ஏற்றவாறு பூரணப்படுத்தப்பட்டு இக் கட்டடம் ஏன் இதுவரையும்  வழங்கப்படவில்லை? என்ற கேள்விகள் மக்களால் எழுப்பப்படுகின்றது.








No comments:

Post a Comment