Wednesday, May 27, 2015

திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராகிறார்

திருநங்கை ஒருவர்
கல்லூரி முதல்வராகிறார்

திருநங்கை ஒருவர், முதல் முறையாக இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டம், கிருஷ்ணாநகர் பெண்கள் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருதங்கையான மானபி பந்தோபாத்யாயா தற்போது வங்க மொழி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர், அடுத்த மாதம் 9ஆம் திகதி, கிருஷ்ணாநகர் பெண்கள் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அவர் பெருமிதத்துடன் கூறுகையில், "பல ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ளேன். தற்போது எனக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம், வாழ்வில் சாதிக்க பாலினம் ஒரு தடை இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment