Friday, May 29, 2015

சவூதி அரேபியா தமாம் நகரில் குண்டு வெடிப்பு நான்கு பேர் உயிரிழப்பு (படங்கள்)


சவூதி அரேபியா தமாம் நகரில்

குண்டு வெடிப்பு

நான்கு பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியா கிழக்கு நகரமான ஷியா மசூதி  (தமாம் நகரில் உள்ள பள்ளிவாசல்) ஒன்றுக்கு அருகில்  இன்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த தற்கொலைக் குண்டுத்  தாக்குதலில் குறைந்த பட்சம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தம்மாம் நகரில் உள்ள அல்-அனவுட் மசூதிக்குள் பெண் உடை அணிந்த படி நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதியை ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டினை அந்நபர் வெடிக்க வைத்ததாகவும், இதில் 4 பேர் பலியானதாகவும், பத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் அல் கதீ என்ற கிராமத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதிக்குள் கடந்த வாரம் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தனது உடலில் கட்டி வந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், 21 பேர்  உடல் சிதறி உயிரிழந்ததும் நினைவிருக்கலாம்.






No comments:

Post a Comment