Friday, June 5, 2015

அமெரிக்காவில் லாட்டரி ஜாக்பாட்டால் 136 மில்லியன் டாலருக்கு சொந்தமான பிளம்பர் (படங்கள்)

அமெரிக்காவில் லாட்டரி ஜாக்பாட்டால்
136 மில்லியன் டாலருக்கு சொந்தமான பிளம்பர்

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் பிளம்பராக பணிபுரியும் ஒருவர் லாட்டரி ஜாக்பாட் மூலம் திடீர் கோடிஸ்வரராக உருவெடுத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய ஆண்டனி பெரோஷி என்னும் பிளம்பர் அறிவிக்கப்பட்ட வெற்றி எண்களுடன் அதனை ஒப்பிட்டு பார்க்காமலேயே இருந்தார். பின் அவரது வாகனம் சேதம் அடைந்ததால் மிகுந்த பண நெருக்கடியில் இருந்த போது வெற்றி பெற்ற லாட்டரியுடன் 3 மாதங்களாகியும் யாரும் ஜாக்பாட் தொகையை கோரி வரவில்லை என்ற செய்தியை படித்தார்.

அதன் பின்னர் அதன் லாட்டரி எண்களை ஒப்பிட்டு பார்த்த போது தான் தான் வெற்றியாளர் என அறிந்து கொண்டார். தனக்கு கிடைத்த ஜாக்பாட் தொகை $136000000 ($136 million) என்பதை அறிந்ததும் மாரடைப்பு ஏற்பட்டது போல் உணர்ந்ததாகவும் இந்த தொகையை தனது மகனுடன் பங்கீட்டுகொள்ள போவதாகவும் அண்டனி தெரிவித்துள்ளார்.






No comments:

Post a Comment