Monday, June 1, 2015

இன்று யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு


இன்று யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் கொலை மற்றும் அதன் பின்னர் பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைகள் தொடர்பான வழக்குகள், இன்று யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களின் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு வழமையை விட பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.  
மேற்படி மாணவியின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் இன்று  ஊர்காவற்றுறை நீதிமன்றத்திலும், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  
இந்நிலையில், யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் கலகக்காரர்களை கலைக்கும் தண்ணீர் பவுஸர் வாகனம் உள்ளிட்டவையும் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 











No comments:

Post a Comment