Thursday, August 6, 2015

ஆப்கானிஸ்தான் இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது 12 இராணுவத்தினர் உட்பட 17 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

12 இராணுவத்தினர் உட்பட 17 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஜாபுலில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ராணுவ வீரர்கள் உட்பட 17 பேர் பலியாகியுள்ள சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
ஜாபுல் மாகாணத்தில் உள்ள ஷிங்காய் மாவட்டத்தில்,ராணுவப் பணிக்காக சென்ற ஹெலிகாப்டர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. இதனால், ஹெலிகாப்டரில் சென்ற குழுவினர் 5 பேரும்,ராணுவத்தினர் 12 பேரும் சம்பவ இடத்திலேயே, பலியாகினர் என அறிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன..


No comments:

Post a Comment