Wednesday, August 5, 2015

அரச அதிகாரியை அச்சுறுத்தினாராம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது!

அரச அதிகாரியை அச்சுறுத்தினாராம்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப்..மஜீத் இன்று புதன்கிழமை கிண்ணியாவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
இவருடன் இவரின் ஆதரவாளர் ஒருவரும்  கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற அவர்விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிண்ணியா பொலிஸாருக்கு பணித்தார். இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு நிலையத்துக்கு அனுமதியின்றி சென்ற இருவரையும் கைதுசெய்தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் அரச அதிகாரியை அச்சுறுத்தியதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை  கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment