Tuesday, August 4, 2015

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு அண்மையில் தேங்கி கிடக்கும் குப்பைகள்!


கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு
அண்மையில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

கல்முனை மாநகருக்கு உட்பட்ட இஸ்லாமபாத் கிராமத்தின் ஒரு புறமே இங்கு காட்டப்படுகின்றது.
சில வார காலமாக தேங்கி கிடக்கும் குப்பைகள் இந்த இடத்தில் நிரம்பி காணப்படுவதனை இதுவரை எவரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல வாரங்கள் கடந்த நிலையில் அதீ துர்நாற்றத்துடன் முழு பிரதேசத்தையுமே இக் குப்பைகள் நாசப்படுத்துகின்றன. மேற்படி பிரதேசமானது கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு மிக அண்மையில் அமைந்துள்ளதனையும் பொருட்படுத்தாமலே இவ்வாறு பல நாட்களாக குப்பைகள் இங்கு தேக்கப்படுகின்றன என அப்பிரதேச மக்களால் குறை தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment