Saturday, August 8, 2015

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன்


சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில்
அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் அவர்கள் இன்று 8 ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்திருந்தார். அமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல், கல்முனை முன்னாள் மாநகர சபை மேயரும் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5ஆம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் உட்பட பெரும் எண்ணிக்கையான கட்சி ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் காரியாலயத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அமைச்சர் குழுவினருக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் ஆகியோர் தமது கருத்துக்களை சபையோர்களிடமும் அங்கு கூடியிருந்த மக்களிடமும் எடுத்துக் கூறினார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.




No comments:

Post a Comment