Wednesday, September 30, 2015

சந்திரிகாவைக் கொல்ல முயன்ற வழக்கு இருவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறை

சந்திரிகாவைக் கொல்ல முயன்ற வழக்கு
இருவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறை


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவைக் கொல்ல முயன்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு 290 ஆண்டுகளும், மற்றொருவருக்கு 300 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் நேற்று 30 ஆம் திகதி புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, சந்திரிகா குமாரதுங்கா கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் அவரைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அவர் அருகே பெண் விடுதலைப் புலி ஒருவர் தன் உடலில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.  இதில் சந்திரிகா குமாரதுங்காவின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
 அதனைத் தொடர்ந்து எழுந்த அனுதாப அலையால் சந்திரிகா குமாரதுங்கா அந்த ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அந்தத் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வேலாயுதன் வரதராஜாவுக்கு 290 ஆண்டுகளும், சந்திரா ஐயர் என்கிற ரகுபதி சர்மாவுக்கு 300 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

 தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் தேசிய அரசில், தேசிய ஒற்றுமை, நல்லிணக்கப் பிரிவுத் தலைவராக சந்திரிகா குமாரதுங்கா பொறுப்பு வகித்து வருகிறார்.

No comments:

Post a Comment