Friday, September 18, 2015

இது மீன்தானா? அல்லது, வேற்றுலக வாசியா? மக்கள் பீதி

இது மீன்தானா? அல்லது, வேற்றுலக வாசியா?

மக்கள் பீதி

ஜப்பானிய  மீனவர் ஒருவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்கவே பயங்கரமாக இருப்பதால், புக்குஷிமா அணு உலை சிதறியதால் பாதிக்கப்பட்டு அது இவ்வாறு உருமாறியிருக்குமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜப்பானில் டால்பின் மீன்களை பிடிக்கும் சீசன் இம்மாதம் முதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்  ஒருவரின் வலையில் சுமார் ஆறடி உயரத்தில் பெரிய மீன் ஒன்று சிக்கியது.
இந்த மீனின் வித்தியாசமான உருவ அமைப்பு, இது மீன்தானா? அல்லது, வேற்றுலக வாசியா? இல்லாவிட்டால், புக்குஷிமா அணு உலை சிதறியதால் ஏற்பட்ட மாற்றமா? என இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரை பீதியடைய வைத்துள்ளது.
எனினும், இதுஉல்ஃப்மீன் வகை என ஒருதரப்பினர் கூறிவருகின்றனர். பொதுவாக உல்ஃப் மீன்கள் 4 அடி வரை வளரும், இந்த மீனின் அதீத வளர்ச்சியே மக்களை பீதியடைய வைத்துள்ளது.

இந்த மீனின் அதீத வளர்ச்சிக்கான காரணத்தை தற்போது ஆய்வு செய்து கண்டறியும் முயற்சியில் ஜப்பானிய மீன்வளத்துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment