Monday, September 28, 2015

கொழும்பு தனியார் வங்கிக் கொள்ளை காணொளி வெளியானது


கொழும்பு தனியார் வங்கிக் கொள்ளை

காணொளி வெளியானது



கொழும்பில் உள்ள தனியார் வங்கியில் நேற்று இடம்பெற்ற கொள்ளை தொடர்பான cctv கமரா காணொளி பதிவினை  பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.
கொழும்புதர்மபால மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், வங்கியின் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கிவிட்டு இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளார்.
அவர் வங்கியில் இருந்து 55 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிட்டவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்த நிலையில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ், இது குறித்த விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் கொழும்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் கீழ் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விபரங்கள் தெரியவந்தால் 011 2323330 மற்றும் 011 2384382 இலக்கங்களுக்கு அறியத் தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
https://youtu.be/ISvl1Vaejsw

No comments:

Post a Comment