Tuesday, September 15, 2015

எமது ஆட்சியில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

எமது ஆட்சியில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு
ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

இலங்கையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆட்சியிலேயே, அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று 15 ஆம் திகதி  காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்துதத் தெரிவித்த பிரதமர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
நான் பிரதமரான பின் முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
இந்தியா-இலங்கைக்கு இடையே, சுமார் 2500 வருடங்களாக வணிக உறவு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் நடுவே வர்த்தக உடன்படிக்கையை கொள்கை ரீதியில் உருவாக்க உள்ளோம்.
தீவிரவாத எதிர்ப்பு, கடலோர பாதுகாப்பு போன்ற விடயங்களில் இணைந்து செயல்படுவோம்.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இலங்கையில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தங்கள் அமையும்.

இரு நாட்டு மீனவர் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்வ காண்பதாக இணங்கியுள்ளோம். மேலும், .நா விசாரணை அறிக்கை குறித்தும் கலந்துரையாடினோம். பழைய காயங்களை உற்று நோக்கும் வேளையில் எதிர்காலத்தையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும்என தெரிவித்தார்.

No comments:

Post a Comment