Friday, October 2, 2015

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நிலச்சரிவு 25 பேர் பலி. 600க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நிலச்சரிவு

25 பேர் பலி. 600க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை


மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு கிட்டதட்ட  ஒரு கிராமமே மண்ணிற்குள் புதைந்தது. இதில் 25 பேர் பலியாயினர். 600க்கும் மேற்பட்டோர் காணமல் போயினர் என அறிவிக்கப்படுகின்றது.
கவுதமாலாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக எல் கம்பிரே டூஸ் என்ற மலையடிவார கிராமத்தில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டது
இதில் அந்த கிராமமே கிட்டதட்ட மண்ணிற்குள் புதைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுவரை 25 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட சமயத்தில், அனைவரும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்ததால் மக்களால் தப்பிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
பள்ளதாக்கு பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் தொடர் மழை காரணமாக ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் தீயணைப்பு படை வீரர்களுடன், தன்னார்வலர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 36 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிர் பிழைத்தவர்கள் அரசு நிவாரண முகாம்களில் தாங்க வைக்கப்பட்டுள்ளனர். 600 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.




No comments:

Post a Comment