Thursday, November 26, 2015

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையில் கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையில்

கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான
கலந்துரையாடல்

வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று 26 ஆம் திகதி வியாழக்கிழமை iஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல, மலிக் சமரவிக்ரம, எம்.எச்..ஹலீம், சரத் அமுனுகம மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை, முதலீட்டு ஊக்குவிப்பு சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன உட்பட தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.







No comments:

Post a Comment