Wednesday, December 30, 2015

வறக்காபொல தும்மலதெனிய எனுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தோர் விவரம் (படங்கள்)

வறக்காபொல தும்மலதெனிய எனுமிடத்தில் ஏற்பட்ட

விபத்தில் மரணமடைந்தோர் விவரம்


கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள வறக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதெனிய எனுமிடத்தில், நேற்று புதன்கிழமை காலை 4.45க்கு இடம்பெற்ற பாரிய விபத்தில் அறுவர் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்துள்ளவர்களில்.இரு குழந்தைகள்மூன்று பெண்கள்ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர்.
சம்மாந்துறையிலிருந்து கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த வானும், பிலியந்தலையிலிருந்து சோமாவதிக்கு யாத்திரீர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பஸ்ஸும் மோதியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சம்மாந்துறையிலிருந்து அவர்கள் வானில், சென்றுள்ளனர். சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும், வானில் பயணித்தவர்கள். சம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள்.
மரணமடைந்தவர்களின் பெயர்கள்
வயது
எம்.எச்.ஐ.அஹமத் (சாரதி)
29
முஹம்மது இப்றாஹீம் ஹபீபத்துன்னிஸா
67
உதுமாலெப்பை நுஸ்ரத் ஜஹான்
27
சின்னத்தம்பி பாத்திமா பரூசா
25
சிராஜ் பாத்திமா ஸாலா
2 1/2
பாத்திமா நுஸ்ரா
2









No comments:

Post a Comment