Sunday, December 27, 2015

காபுல் விமான நிலையம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு Deadly car bomb explodes at Kabul airport

காபுல் விமான நிலையம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு
Deadly car bomb explodes at Kabul airport

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள விமான நிலையத்தில் சற்று முன் நடந்த தற்கொலைப்படை தாக்குதலால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றின் மூலம் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் இத் தாக்குதல்  நடத்தப்பட்டடுள்ளது
குண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றின் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அங்கிருந்த அப்பாவி பொதுமக்களில் ஒருவர் பலியானதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பெற்காத நிலையில், தங்கள் மீது தாக்குதல் நடத்தும் அரசு மற்றும் வெளிநாட்டுப் படையினருக்கு எதிராக தலிபான் அமைப்பினர் நடத்திய தாக்குதலாக இது இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.







No comments:

Post a Comment