Sunday, January 31, 2016

சிரியாவில் ஷியா பிரிவு வழிப்பாட்டு தளம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 50 பேர் பலி 120 பேர் காயம் (படங்கள்)

சிரியாவில் ஷியா பிரிவு வழிப்பாட்டு தளம் அருகே

அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 50 பேர் பலி 120 பேர் காயம்

சிரியாவில் வழிப்பாட்டுத் தளம் ஒன்றில் அருகே நிகழ்த்தப்பட்ட மூன்று குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்டமாக அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனமான சனா கூறியிருந்தது.
சிரிய தலைநகர் டமாஸ்கஸ்ஸின் தெற்குப்பகுதியில் உள்ள ஷியா பிரிவு வழிப்பாட்டு தளம் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் 50 பேர் பலியாகியுள்ளதாகவும், 120 பேர் காயமடைந்துள்ளதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இதே வழிப்பாட்டு தளம் அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.







No comments:

Post a Comment