Sunday, January 31, 2016

நைஜீரியாவில் உள்ள கிராமத்தில் "போகோ ஹராம்' தாக்குதல் 50 பேர் பலி?

நைஜீரியாவில் உள்ள கிராமத்தில்

"போகோ ஹராம்' தாக்குதல் 50 பேர் பலி?

நைஜீரியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், "போகோ ஹராம்' பயங்கரவாத அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து இராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:
நைஜீரியா நாட்டின் வடகிழக்கு நகரமான மைடுகுரி நகரத்துக்கு 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலோரி என்ற கிராமத்தில் சனிக்கிழமை மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அந்தக் கிராமமே தீக்கிரையானது.
பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அகதிகளின் முகாம், அந்தக் கிராமத்துக்கு அருகே அமைந்துள்ளது. அந்த முகாமுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை, இராணுவத்தினர் விரட்டி அடித்தனர்.

இதனிடையே, நைஜீரியாவின் எல்லையில் உள்ள லேக்சாத் பகுதியில் தற்கொலைப் படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


No comments:

Post a Comment