Saturday, January 30, 2016

இன்று கைதான யோஷித்த ராஜபக்ஸ வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

இன்று கைதான யோஷித்த ராஜபக்ஸ

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

இன்று 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு  கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்..
இதையடுத்து அவரை இரண்டு வாரங்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து எட்டு மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  பொலிஸாரின் வாகனத்தில் அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


No comments:

Post a Comment