Saturday, January 30, 2016

யோஷித்தவிடம் நிதி மோசடி பிரிவினர் விசாரணை

யோஷித்தவிடம் நிதி மோசடி பிரிவினர் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை நடாத்தி வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணைகள் கடற்படை தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
காலை 9.30 மணி அளவில் அழைக்கப்பட்டிருந்த யோஷித்த ராஜபக்ஸவிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இச்செய்தியை அவரின் சகோதரரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment