Friday, January 29, 2016

முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் அதிரடி கைது!

முன்னாள் ஜனாதிபதியின்
ஊடக பேச்சாளர் அதிரடி கைது!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக பேச்சாளரும், சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருமான ரொஹான் வெலிவிட்ட நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் அண்மையில் செய்த முறைப்பாட்டுகமைய நிதி மோசடியில் ஈடுபட்டார் என தெரிவித்து இவரிடம் நிதி குற்ற விசாரணை பிரிவினர் பல தடவைகள் விசாரணை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கிருலப்பனை பொல்ஹேன்கொட பகுதியிலுள்ள வீட்டில் வைத்து இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சி.எஸ்.என் எனப்படும் கார்ட்டன் ஸ்போட்ஸ் நெட்வேக் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில், அதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மேசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment